ஆச்சரியம் ஆனால் உண்மை 4 பந்துக்கு 92 ரன்கள் விட்டு கொடுத்த பந்து வீச்சாளர்


*வங்காள தேசத்தில் நடந்த டாக்கா டிவிசன் செகண்ட் லீக் தொடரில் வங்கதேச பந்து வீச்சாளர் ஒருவர் 4 பந்துக்கு 92 ரன்கள் கொடுத்துள்ள சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது



*வங்காள தேசத்தில் தி டாக்கா 2வது டிவிஷன் கிரிக்கேட் லீக் (The Dhaka Second Division Cricket) தொடர் நடைபெற்று வருகிறது

*இதில் நேற்றைய போட்டியில் அக்சியோம் அணியினரும் லால்மாட்டிய அணியினரும் மோதிய போட்டி நடைபெற்றது

*இப்போட்டியில் முதலி பேட்டிங் செய்த  லால்மாடிய அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்கள் எடுத்தது

*இதனால் 89 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அக்சியோம்  அணி சார்பில் துவக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர்

*அதன் படி லால்மாட்டிய  அணி சார்பில் முதல் ஒவரை சுஜன் முகமது வீசியுள்ளார். இதில் 4 பந்துகள் வீசி 92 ரன்கள் கொடுத்து, அக்சியோம் அணியை வெற்றி பெற வைத்தார்

*கிரிக்கெட் உலகின் மிக மோசமான பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய ஓவரில் 65 ஒய்டு மற்றும் 15 நோ பால் வீசியுள்ளார். அதன் பின்னர் நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது

*இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு கேண்டர்பரில் நடந்த முதல் தர போட்டியில் ஒரு ஓவருக்கு 77 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)