BE - Application Fees Payment - Online Process only
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது,விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்து
ம் புதிய முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள்உள்ளன. இக்கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத் தாழ 2 லட்சம் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படு கின்றன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் 31 வரை ஆன்லைனில் பதிவுசெய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட விண் ணப்பத்தை உரிய ஆவணங்க ளுடன் இணைத்து ஜுன் 3-ம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அண்ணா பல் கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.பொறியியல் படிப்பில் சேர 2015-ம் ஆண்டு வரை அச்சடிக்கப் பட்ட விண்ணப்பங்களே வழங்கப் பட்டு வந்தன. ஆன்லைனில் விண் ணப்பிக்கும் வசதி இருந்தபோதும் அது மாணவர்களின் விருப்பத் துக்கு விடப்பட்டிருந்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 12-ம் தேதி வெளியாகிறது. எனி னும் மாணவர்கள் தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்தி ராமல் மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை (பெயர், பிறந்த தேதி, முகவரி போன்றவை) ஆன்லைனில் பதிவுசெய்து வைத் துக் கொள்ளலாம். தேர்வு முடிவு வந்ததும் மதிப்பெண் விவரங் களைக் குறிப்பிட்டு ஆன்லைன் பதிவை முழுமை செய்துவிடலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நாள் வரை காத்திராமல்மே 1-ம் தேதியில் இருந்தே பிளஸ் 2 மதிப்பெண் நீங்கலாக இதர அடிப்படை விவரங்களை ஆன்லைனில் பதிவுசெய்து வைத்துக் கொள்ளலாம்.