பள்ளிக் கல்விக்கு தனி இணையதளம்


அரசு துறை இணையதளங்களை மாநில அரசுகள் 'அப்டேட்' செய்வதில்லை.இதனால் காலாவதியான தகவல்களே இடம்பெற்றுள்ளன. இதையடுத்து இணையதளங்களை நவீனப்படுத்தி, அடிக்க
டி 'அப்டேட்' செய்ய வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பள்ளிக்கல்வித்துறைக்கு அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய தனி இணையதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்ட வாரியாக அனைத்து வித பள்ளிகளின் தகவல்களும் இடம்பெற உள்ளன. இதில் பள்ளிகளின் வரலாற்று சிறப்பு, விளையாட்டு சாதனை, தேர்ச்சி விகிதம், இதர சாதனைகள், இலக்கியம் போன்றவை இடம் பெறும். மேலும் அதுதொடர்பான படங்கள், வீடியோ தொகுப்புகளும் இருக்கும். இப்பணிகளில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக உள்ளன. அப்பள்ளிகளின் பெருமைகள், மாணவர்களின் சாதனைகளை இணையதளத்தில் வெளியிடும்போது, மற்ற பள்ளிகளும் மாற வாய்ப்புள்ளது. மக்களிடம் அரசு பள்ளி மீதான தவறான கண்ணோட்டம் குறையும், என்றார்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank