தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

தகவல் அறியும் உரிமை சட்ட விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை !! தகவல் அறியும் உரிமை சட்டம்




RTE FULL DETAILS AND IMPORTANT POINTS: 




1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம். 




2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்




3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ்




4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி 5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்




6.தகவல் கோரும் விண்ணப்பக் கட்டணம். ரூ.10/- செலுத்தப்பட்டதற்கான சான்று. (நீதி மன்ற வில்லை எனில்(court fees stamp) மனுவின் மேல் பாகத்தில் ஒட்டி விடலாம்.)




7.நீதிமன்ற வில்லையை[court fees stamp] (ஒட்டியதும் உங்கள் விண்ணப்பத்தை ஒளிநகல் (xerox) எடுத்து வைக்கவும் 




8.விண்ணப்பத்தை ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு தபாலில் அனுப்ப வேண்டும். (மெல் முறையீட்டின் போது ஒப்புதல் அட்டை முக்கியம். தகவல் பெரும் உரிமை சட்டத்தில் எந்தெந்த தகவல்கள் கேட்கலாம்?. ( What type questions can be asked in RTI act 2005 ) 




1) பதிவேடுகள் (Records), 




2) ஆவணங்கள் (Documents),




3) மெமோ எனப்படும் அலுவலக குறிப்புகள். ( Memo Office Tips),




4) கருத்துரைகள் (Comments), 




5) அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள், 




6) அலுவலகங்களின் செய்தி குறிப்புகள் (Offices of the Information notes), 




7) சுற்றறிக்கைகள் (Circulars),




8) ஆவணகள் (Documentation), 




9) ஒப்பந்தங்கள் (Agreements), 




10) கடிதங்கள் (Letters), 




11) முன்வடிவங்கள் (Model), 




12) மாதிரிகள் (Models),. 




13) கணீனி சார்ந்த பதிவுகள் (Information stored in computer), 




14) மின்னஞ்சல்கள் (Emails). 




15) பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள் (All information of public good well), 




16) சம்மந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை, (The right to review relevant documents and records), 




17) நகல் எடுக்கும் உரிமை (Right to take Xerox) 




ஆகியன உறுதிப்படுத்தபட்டுள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மேல் முறையீடு: பொதுத் தகவல் அலுவலர் 30 நாட்களில் தகவல் தரவில்லையென்றாலோ, அல்லது அவர் அளித்த தகவல் திருப்திகரமாக இல்லையென்றாலோ அந்தந்த துறைகளில் பிரிவு 19ன் கீழ் உள்ள மேல் முறையீட்டு அதிகாரியிடம் 30 நாட்களுக்குள் முதல் மேல் முறையீடு செய்யலாம். மேல் முறையீட்டு அதிகாரியின் பதில் திருப்திகரமாக இல்லையெனில் 90 நாட்க ளுக்குள் பிரிவு 19 (3)ன் கீழ் மாநில தகவல் ஆணையரிடம் இரண்டாவது மேல் முறையீடு செய்யலாம். மாநில தலைமை தகவல் ஆணையர், தமிழ்நாடு தகவல் ஆணையம், 




2, தியாகராயசாலை, ஆலையம்மன் கோவில் அருகில் , தேனாம்பேட்டை, சென்னை -600018. தொலைப்பேசி எண்: 044 - 2435 7581, 2435 7580 தகவல் தர மறுத்தால் தண்டனை Sec 20 RTI Act தகவல் மறுத்தால் ரூ 25000 அபராதம் & ஒழுங்கு நடவடிக்கை பொது தகவல் அலுவலர் செய்யும் பின்வரும் செயலுக்கு ரூ 25000 அபராதம் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிவரும்




1. நியாயமான காரனம் இல்லாமல் விண்னப்பம் வாங்க மறுத்தால்

2. உரிய காலகெடுவில் தகவல் தர மறுத்தால் (30 நாட்கள்)

3. தகவலுக்கான வேண்டுகோளை தீய எண்ணத்துடம் மறுத்தால்

4. தவறான, முழுமையுறாத, தவறான எணத்தை தோற்றுவிக்கும் வகையில் தகவலை தெரிந்தே கொடுத்தால்

5. தகவலை அழித்தால் 

6. தகவல் கொடுப்பதை தடுத்தால் பிரிவு 20 (1) படி நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் அபராதம் ரூ 25,000 உயர்த பட்ச அபராதம் பிரிவு 20 (2) படி துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்படி காரணத்திற்காக தகவல் ஆணையகம் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் தண்டனை விதிக்கும் முன்பு பொது தகவல் அலுவலர் விளக்கம் கேட்ட பின்னர்தான் தண்டனை விதிக்க முடியும் நியாயமாகவும் கவணமாக செயல்பட்ட பொது தகவல் அலுவலர் மீது தண்டனை விதிக்க இயலாது. 




குறிப்பு: பொதுவாக தகவல் ஆனையகம் தண்டனை விதிப்பதை தவிர்க்கின்றது தண்டனைகள் (பிரிவு-20) மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது: 

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ; 

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ; 

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ; 

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ; 

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; 




அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும். மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும் – thagaval ariyum urimai sattam 2005 தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலத்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான இணையதளங்கள்: http://www.righttoinformation.gov.in

http://www.rtiindia.org இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http:// www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம். ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர். தகவல் உரிமை பற்றி தமிழக அரசின் இணைய தளம் http://www.tn.gov.in/rti/ தகவல் அறியும் உரிமை பற்றி மத்திய அரசின் இணையத்தளம் http://rti.gov.in/ மேலும் தகவல் உரிமை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் http://persmin.nic.in/RTI/WelcomeRTI.html முறையாக தகவல் கேட்பது எப்படி? http:// www.rtiindia.org/ கிராம மற்றும் பஞ்சாயத்து நிர்வகாம் பற்றி அரசாங்கத்தின் கோப்பு http://www.tn.gov.in/rti/proactive/rural/handbook_RD_PR.pdf

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022