பள்ளி மாணவர்களுக்கு சமூக ஊடகங்கள் குறித்து அறிவுரை!!
பள்ளிகளில் மாணவர்களுக்கு ‘போலி செய்திகளை’ எவ்வாறு கண்டுப்பிடிப்பது என்பது குறித்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டு கல்வி(ஓ.இ.சி.டி) இயக்குனர் ஆன்ட்ரியாஸ் ஸ்லெஷர் கூறியுள்ளார்.
15 வயது குழந்தைகளின் அறிவு மற்றும் திறனை அளவிடும் சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டு திட்டத் தேர்வில் உலக திறன்கள் சம்மந்தப்பட்ட கேள்விகளை சேர்க்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் எதிரொலிக்கும் செய்திகளுக்கு அப்பால் இருக்கும் கருத்துகளை இளைஞர்கள் பார்க்க வேண்டும். அங்கே அவர்களுடைய சொந்தக் கருத்து போன்ற குரல்களை மட்டுமே கேட்கமுடிகிறது. எனவே தங்களது கருத்துகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்வதற்கு இடம் கொடுக்க வேண்டும் என்று ஸ்லெஷர் தெரிவித்துள்ளார்.
மேலும், பள்ளிகளில் பகுப்பாய்வு மற்றும் குழு விவாதங்களை நடத்தி "போலி செய்திகளைக்" கண்டறிவது குறித்து மாணவர்களிடம் கற்பிக்க வேண்டும் என்று ஓஇசிடியின் கல்வி நிபுணர் கூறியுள்ளார்.
கடந்த காலத்தில், ஒரு தகவல் தேவைப்படும்போது என்சைக்ளோபீடியா போன்ற ஆதாரங்களைப் பயன்படுத்தி தெரிந்துக்கொள்ள முடிந்தது. அந்த தகவல் உண்மையானதென நம்ப முடிந்தது. ஆனால், தற்போது சமூகஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் ஒரு செய்திக்கு பல தகவல்கள் வெளியாகிறது. இந்த செய்திகளில் நம்பகத்தன்மையான செய்தி எது என்பதை இளைஞர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
வரும் 2018-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சர்வதேச மாணவர்கள் மதிப்பீட்டு திட்டத் தேர்வில் எழுத்துத் தேர்வை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன்மூலம் இளைஞர்களுக்கு ஒத்த கருத்துகள் மற்றும் வேறுப்பட்ட கருத்துகள் குறித்த பகுத்தறிவும், திறனும் வளரும் என்று கூறியுள்ளார்.
இதுவரை கணிதம், அறிவியல், வாசிப்புத்திறன் போன்ற தேர்வுகள் மட்டும் நடத்தி வந்த நிலையில் தற்போது இந்த புதிய நடவடிக்கை சேர்க்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கையினால் மாணவர்கள் உலகத்தை வேறுப்பட்ட கண்ணோட்டத்தில் பார்க்க முடியும்.
அவர்களுக்கு உலகில் உள்ள பல மதங்கள் மற்றும் பல இனங்களையுடைய நாடுகளை ஒரே கலாச்சாரத்துக்குள் கொண்டு வர தேவைப்படுகிறது. இதன் விளைவாக ஒரே மார்க்கமும். ஒரே நம்பிக்கையும் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.
ஒத்த பண்புள்ள மக்களுடன் ஒத்துழைப்பதற்கும், தொடர்புகொள்வதற்கும் சமூக ஊடகங்களால் ஊக்குவிக்க முடியும் என்பதை ஸ்லெஷர் எச்சரிக்கிறார்.
“ஒரு நேர்மறை பன்முகத் தன்மையான பார்வைக்கு மக்கள் தயாராகமல் இருக்கிறார்கள். அதனால், மக்கள் பிரிந்து கிடக்கும் நிலையை நீங்கள் பார்க்கலாம். இதை சமூக ஊடகங்கள் மேலும் வலுப்படுத்தும்” என்று ஸ்லெஷர் கூறுகிறார்.
புலம்பெயர் மற்றும் தேசிய அடையாளங்களின் பின்னணியில் வளரும் பதற்றங்களுக்கு எதிராக, மக்கள் பல்வேறு கருத்துக்கள் மற்றும் மாறுப்பட்ட கொள்கைகள் வழியாக நகர்ந்த போது ஐரோப்பா எப்பொழுதும் அதன் பணியைச் சிறப்பாகவே செய்துள்ளது.
இதற்கு மறுமலர்ச்சி காலம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. அப்போது பலதரப்பட்ட மக்கள் சேர்ந்து வாழ்ந்தார்கள். சுதந்திரச் சமுதாயமாகவும், பன்முகச் சமுதாயமாகவும் நல்ல திறமையுடன் பிறரைக் கவரும் வகையில் இருந்தார்கள் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு கல்வி இயக்குநர் ஆன்ட்ரியாஸ் ஸ்லெஷர் கூறியுள்ளார்.