நிரந்தர மையங்களுக்கு சென்று ஆதார் அட்டையில் இன்று முதல் திருத்தம் செய்து கொள்ளலாம்


தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள 
செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-


தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், தமிழகம் முழுவதும் 303 
நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து 
வருகிறது. தலைமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் 
அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை 

அலுவலகம் (ரிப்பன் மாளிகை), பெருநகர சென்னை மாநகராட்சியின்
 மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் 
ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை 
மையங்களில், ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது 
ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம்
 செய்யும் வசதி 17-4-2017 அன்று (இன்று) முதல் வழங்கப்படவுள்ளது.

எனவே, பொதுமக்கள் கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு 
செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி 
எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து
 கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் 
கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம்.

சேவை கட்டணம் எவ்வளவு?

ஆதார் பதிவு செய்வதற்கும், 5 மற்றும் 15 வயது முடித்தவர்களுக்கான 
கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்வதற்கும் சேவை கட்டணம் 
எதுவும் கிடையாது. நிலைப்புள்ளி விவரங்களை, அதாவது, பெயர், 
பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 
முகவரி ஆகியவைகளை திருத்தம் செய்வதற்கும் மற்றும் 
புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25-ம், ஆதார் 
விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10-ம் 
சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.

மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு
 வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. 
மேலும், பொதுமக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையங்களில் 
பணிபுரியும் தரவு உள்ளட்டாளரிடம் இருந்து கேட்டு பெற்றுக்கொள்ளவும். 
சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் எனில் கட்டணமில்லா
 தொலைபேசி எண் 1800 425 2911-ஐ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.  
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)