மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி : 'யங் இந்தியா' அமைப்பு ஏற்பாடு


மதுரை: மதுரை இந்திய தொழில் கூட்டமைப்பு மண்டல அலுவலகத்தில் 'யங் இந்தியா' அமைப்பு சார்பில், மாணவர்களுக்கான திறன் மேம்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.


அமைப்பின் மதுரை பிரிவு தலைவர் விஜயதர்ஷன் ஜீவகன் பேசியதாவது:
2002ல் துவக்கப்பட்ட அமைப்பு, நாடு முழுவதும் 40 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. உடல் உறுப்பு தானம், 'பிளாஸ்டிக்' ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மதுரையில், தொழிற்சாலை கள ஆய்வு, தொழில் முனைவோர் பயிற்சி வகுப்பு, பகுதி நேர பணி போன்றவற்றின் மூலம் மாணவர்கள் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தொழில் துவங்க ஊக்குவிக்கப்படுவர். மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, 'ஆண்ட்ராய்டு' செயலி உருவாக்கம், அழகு கலை பயிற்சிகள் போன்றவை வழங்கப்படும். இதில் பங்கேற்று பயன்பெற மாணவர்கள் ஆண்டுக்கு 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாணவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த, 'யுவா' என்ற தனி பிரிவு செயல்பட்டு வருகிறது, என்றார். ஆர்.எல். இன்ஸ்டிடியூட் 
ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், கலசலிங்கம் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரிகளின் பிரதிநிதிகள், அமைப்பின் இணை தலைவர் குணசேகரன், 'யுவா' பிரிவு தலைவர் பிரமோத் ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)