தலைமை செயலகத்தில் வேலைவாய்ப்பு
சென்னை: தலைமை செயலகம், சட்டசபை பணிகளில், 1,953 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது
.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப் - 2, 'ஏ' பிரிவில் அடங்கிய, தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையில் உதவியாளர், கணக்கர், நேர்முக உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பதவிகளில், 1,953 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு, நேர்முகத் தேர்வு கிடையாது. உதவியாளர் மற்றும் கணக்கர் பதவிகளுக்கு, ஏதேனும் இளங்கலை பட்டம் அல்லது சட்டப்படிப்பில் தேர்ச்சி
இந்த தேர்வுக்கு, மே, 26 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்; ஆக., 6ல் எழுத்து தேர்வு நடக்கும். கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in, www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய, இணையதளங்களில் அறியலாம். விண்ணப்பிக்கும் முறை குறித்து, 044 -- 2533 2855, -2533 2833 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி, 1800 -425-1 002- ஆகிய எண்களில் விளக்கம் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.