பதினொன்றாம் வகுப்பிலும் ஆண்டுப் பொதுத்தேர்வு
பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத்தேர்வு முறையை கொண்டு வருவது குறித்து, கருத்து கேட்பு துவங்கியுள்ளது. மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. அதிலும், தனியார் பள்ளி மாணவர்களை விட,
அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைவாகவே உள்ளது.
இந்த நிலை மாற, கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டு வரும்படி, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத்தேர்வு முறை கொண்டு வரலாமா என்பது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆந்திராவில், பிளஸ் 1 பொதுத்தேர்வு மதிப்பெண்களும், பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணக்கில் சேர்க்கப்படுகின்றன.
அதனால், ஐ.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், ஆந்திர மாணவர்கள் அதிக அளவில் சேர்கின்றனர்.எனவே, தமிழகத்திலும் பிளஸ் 1க்கு, பொதுத்தேர்வை கொண்டு வரலாமா என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இது தொடர்பாக, கல்வியாளர்களிடம், கருத்து கேட்பு துவங்கியுள்ளது.