பிஎஸ்என்எல்-ன் அசத்தலான மூன்று முத்தான அதிரடி சலுகை!

முதலாவதாக "டிரிப்பிள் ஏஸ்' (Triple Ace) என்ற புதிய திட்டத்தின்படி ரூ.333-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி வேகத்தில் தினமும் 3ஜிபி டேட்டா வரை வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 90 நாட்களாகும். அதாவது வாடிக்கையாளர்கள்
ரூ.1.23காசுக்கு ஒரு ஜிபி என்ற அடிப்படையில் 270 ஜிபி கிடைக்கும்.

"தில் கோல் கே போல்' (Dil Khol Ke Bol) திட்டத்தின் கீழ் ரூ.349-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, வரம்பற்ற உள்ளூர்-வெளியூர் அழைப்புகளுடன் தினமும் 2ஜிபி டேட்டா 3ஜி வேகத்தில் வழங்கப்படும். இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்களாகும்.

மூன்றாவதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள "நெஹ்ளே பே தெஹ்லா' (Nehle pe Dehla) திட்டத்தில் ரூ.395-க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கில் 3,000 நிமிட அழைப்புகளும், இதர நிறுவன நெட்வொர்க்கிற்கு 1,800 நிமிட அழைப்புகளும் வழங்கப்படும். அத்துடன் தினமும் 2ஜிபி டேட்டாவும் கிடைக்கும். இத்திட்டத்தின் வேலிடிட்டி காலம் 71 நாட்களாகும்.


போட்டி நிறுவனங்களை சமாளிக்கும் விதமாக, ரூ.339- திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தினசரி 2ஜிபி டேட்டா என்ற அளவிலிருந்து 3ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பி.எஸ்.என்.எல். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)