சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீ
ட்டு முறை அறிமுகமாகிறது.
நாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.
இந்தப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு வரை, 10ம் வகுப்புக்கு, சில மாணவர்களுக்கு பொது தேர்வும், சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு, 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல்