கடந்த 2014 ஜூலை முதல் 2015 ஆகஸ்ட் வரை வங்கிக்கணக்கு துவங்கியவர்கள், தங்களது ஆதார் எண் மற்றும் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்(KYC) படிவத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் பூர்த்தி செய்யாத வங்கிகணக்குகள் முடக்கப்படும். அந்த விவரங்களை அளித்தால் மட்டுமே, அந்த வங்கிக்கணக்குகளை செயல்படுத்த முடியும். இந்தியா அமெரிக்கா இடையே செய்து கொள்ளப்பட்ட எப்ஏடிசிஏ சட்டத்தின் கீழ் வரும் வங்கிக்கணக்குகளுக்கும் பொருந்தும். 2014 ஜூலை 1 முதல் 2015 ஆகஸ்ட் 31ம் தேதி வரை துவங்கப்பட்ட தனி நபர் மற்றும் நிறுவனங்கள் வங்கிக்கணக்குகளின் சுய சான்றிதழ்களை பெற வேண்டும். இது குறித்து வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஆவணங்கள் வழங்காத வாடிக்கையாளர்கள் எவ்வித பணப்பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. வங்கி, காப்பீடு, பங்குச்சந்தை ஆகியவற்றிற்கும் இது பொருந்தும். இவ்வாறு அவர்கள் கூறினர்.