How to change PAN card address?


PAN கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி?
   ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் புது முகவரிக்குச் மாற்றினால், அதை உடனே பான் கார்டில் பதிவு அல்லது சரி செய்யவேண்டியது அ
வசியம்.

பான் கார்டில் உள்ள முகவரி வருமான வரித்துறை பதிவு செய்யப்படுவதால் இதனை உடனடியாகத் திருத்துவது சாலச்சிறந்தது.
இதனை நீங்கள் எளிமையாக ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம்.
ஆன்லைனில் பான் கார்டு முகவரியைத் திருத்தும் வழிகள். இதுதோ உங்களுக்காக..
இணைய முகவரி
இந்த இணைய முகவரிக்குச் சென்று (https://tin.tin.nsdl.com/pan/changerequest.html)PAN Data Request Form என்ற தொடர்பில் மாற்றம் அல்லது திருத்தம் தொடர்பான (changes or correction) வசதியை பயன்படுத்த வேண்டும்.
இந்த விண்ணப்பத்தில் "update communication address" என்ற கோரிக்கையில் டிக் செய்ய மறந்து விடாதீர்கள்.

முக்கிய விபரங்கள்
உங்கள் பான் கார்டில் உள்ள விவரங்களில் செய்யவேண்டிய மாற்றங்களுக்கு விண்ணப்பத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் (* குறியிடப்பட்ட விவரங்கள்) பூர்த்தி செய்து மாற்றம் தேவையான இடங்களில் எதிரே இடது புறம் கொடுக்கப்பட்டிருக்கும் பெட்டியில் தேர்வு (செலக்ட்) செய்யவேண்டும்.
கட்டணம்
உங்கள் தொடர்பு முகவரி இந்தியாவிற்குள் இருந்தால் பான் கார்டை அனுப்ப ரூபாய் 105 செலுத்த வேண்டும் (93 ருபாய் மற்றும் 12.36 சதவிகிதம் சேவை வரி).
கிரெடிட் கார்டுக்கு கூடுதல் கட்டணம்
கட்டணத்தை டிமாண்ட் டிராப்ட், காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது இணைய வங்கிதளம் மூலமாகச் செலுத்தலாம். கிரெடிட் கார்டு உபயோகத்திற்கு 2 சதவிகித கூடுதல் கட்டணம் உண்டு.
ரசீது
கட்டணம் செலுத்துகை முடிந்த பிறகு அதற்கான ரசீது (acknowledgement) திரையில் தெரியும். அதனை நீங்கள் உங்கள் கணினியில் பதியவோ அல்லது பிரிண்ட் செய்தோ வைத்துக்கொள்ளலாம்.
புகைப்படங்கள்
தனி நபர் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தின் இடதுபுறத்தில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய அண்மையில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை ஒட்டி பாதிப் புகைப்படத்திலும் பாதி விண்ணப்பத்தில் வருமாறும் கையொப்பமிட வேண்டும்.
விண்ணப்பம்
இந்த ரசீது அல்லது விண்ணப்பத்தைப் புகைப்படத்துடன் கையொப்பமிட்ட பின்னர் (தனி நபர்களுக்கு மட்டும்) அதனுடன் கட்டணத்திற்கான டிடி அல்லது காசோலை (ஆன்லைனில் செலுத்தாதமல் நேரடியாகச் செலுத்த விரும்புவோர்) மற்றும் தற்போதுள்ள பான்கார்டின் நகல், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றிற்கான அடையாளச்சான்று ஆகியவற்றுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்பவேண்டும்.
முகவரி
NSDL e-Governance Infrastructure Limited, 5th floor,
Mantri Sterling, Plot No. 341,
Survey No. 997/8, Model Colony,
Near Deep Bungalow Chowk,
Pune - 411016'.
பின் குறிப்பு: நீங்கள் அனுப்பும் விண்ணப்ப கவரின் மீது 'APPLICATION FOR PAN CHANGE REQUEST-Acknowledgment Number' என்று குறிப்பிடவும் (உதாரணம்: APPLICATION FOR PAN CHANGE REQUEST-881010200000097).

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank