jio டண் டணா டண் ஆஃபர்: முழு தகவல்கள்


     ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகைக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஜியோ டண் டணா டண் என்ற பெயரில் சலு
கைகளை அறிவித்துள்ளது.


புதுடெல்லி:ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் புதிய சலுகைகள் அறிவிக்கப்படும் என ஜியோ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஜியோ தளத்தில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 


அதன்படி ரிலையன்ஸ் ஜியோ இரண்டு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது, இவை நாள் ஒன்றிற்கு முறையே 1 ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா வழங்குகின்றன. ஏற்கனவே ஜியோ பிரைம் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தின் விலை ரூ.309 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வேலிடிட்டி 84 நாட்கள் (28 நாட்கள் x 3 மாதங்கள்) ஆகும். இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களும் அடங்கும். 


ஜியோ பிரைம் திட்டத்தில் சேராதவர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.349 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ நெட்வொர்க்கில் புதிதாய் இணைபவர்களுக்கு இந்த திட்டம் ரூ.408 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்துடன் ஜியோ பிரைம் திட்டத்திற்கென ரூ.99 செலுத்த வேண்டும். 


ஜியோவின் மற்றொரு திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.509 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இந்த திட்டத்திலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. பிரைம் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யாதவர்களுக்கு இந்த திட்டத்தின் விலை ரூ.549 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிதாய் ஜியோவில் இணையும் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்திற்கு ரூ.608 (ரூ.509 + ரூ.99 பிரைம்) செலுத்த வேண்டும். 


ஜியோ டண் டணா டண் என அழைக்கப்படும் புதிய சலுகையிலும் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் திட்டத்தில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. முந்தைய ஜியோ திட்டங்களை போன்றே தினசரி டேட்டா பயன்பாட்டிற்கு பின் டேட்டா வேகம் 128Kbps என குறைந்துவிடும். 


ஏற்கனவே ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகையில் ரூ.303 மற்றும் அதற்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்தவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை விட கூடுதலாக ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. 

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022