TNTET - 2017 Exam ஹால்டிக்கெட் தயார்.


டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அ
னுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது.இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கி மார்ச் 23ம் தேதியுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மொத்தம் 8 லட்சத்து 47 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன. விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது. தவறாக பூர்த்தி செய்தது, தகுதி இல்லாத பாடங்களுக்கு விண்ணப்பித்தவை என சுமார் 2,000 பேரின் விண்ணப்பம் கண்டறியப்பட்டுள்ளது.மற்ற விண்ணப்பங்களுக்கு ஹால்டிக்ெகட் தயாரிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 29ம் தேதி 598 மையங்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுக்கு 1,263 தேர்வு மையங்களும் அமைக்க டிஆர்டி ஏற்பாடு செய்துள்ளது.

தேர்வு எழுத தகுதியானவர்கள் பட்டியலை அடுத்த வாரம் இணைய தளத்தில் டிஆர்பி வெளியிட உள்ளது. அப்போது, ஹால் டிக்கெட் குறித்த விவரங்களும் வெளியிட்டுஇணை தளம் மூலமாகவே ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதுதவிர, தபால்மூலம் ஹால்டிக்கெட் அனுப்பவும் டிஆர்பி முடிவு செய்துள்ளது.வெயிட்டேஜ் முறையில் மதிப்பெண் டிஇடி தேர்வில் வெற்றி பெறுவோர் ஆசிரியர் பணி நியமனம் பெறுவதற்கு முன்பு கடை பிடித்த வெயிட்டேஜ் முறையின் கீழ் மதிப்பீடு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வில் (டிஇடி) பெற்ற மதிப்பெண்ணை 60 ஆல் பெருக்கி 150 ஆல் வகுக்க கிடைக்கும் மதிப்பெண், இடைநிலைஆசிரியர் தேர்வில் (டிடிஎட்) பெற்ற மெதிப்பெண்ணை 25 ஆல்பெருக்கி மொத்த மதிப்பெண்ணால் வகுக்க கிடைக்கும் மதிப்பு (25%), மேனிலைத் தேர்வில் (பிளஸ் 2) பெற்ற மதிப்பெண்ணுக்கு 15% நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதற்கு, மொத்த மதிப்பெண்ணை 15 ஆல் பெருக்கி, 1200ல் வகுக்க கிடைக்க மதிப்பு எடுக்கப்படும். மேற்கண்ட முறையின் கீழ் 60%, 25%, 15% என கணக்கிட்டு அவற்றை கூட்டினால் வரும் மதிப்பெண்படி பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் போடுவார்கள்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank