வீடியோக்களை Vookmark பண்ணுங்க... பார்த்து ரசிங்க!
ஒவ்வொரு நிமிடமும் யூடியூப் தளத்தில் 500 மணி நேர அளவிற்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவிக்கிறது. யூடியூப்பில் உள்ள அத்தனை வீடியோக்களையும் பார்க்க வேண்டு
மென்றால், வடிவேலு பாணியில் சொல்வதென்றால், கேப்பு விடாமல் பார்த்தால் கூட 60,000 வருடங்கள் ஆகும் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இது யூடியூப்க்கு மட்டும். இது போக, FaceBook, DailyMotion, Vimeo மற்றும் Reddit போன்ற பல வலைதளங்களிலும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு நொடியும் பரபரவென்று தகவல்கள் வந்து குவியும் இணையத்தில் எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் பார்க்கவோ படிக்கவோ நம்மால் முடிவதில்லை என்பதே நிதர்சனம்.
இணையத்தில் நம் கவனத்தை ஈர்க்கும் விஷயங்களை, குறிப்பாக வீடியோக்களை தேவைப்படும்போது காண, பலர் பல்வேறு வகையான சேமிப்பு உத்திகளைக் கையாள்கிறோம். ஒவ்வொரு இணையதளமும் / செயலியும் அவற்றில் உள்ள வீடியோக்களைச் சேமிக்க சில வழிவகைகளைச் செய்திருக்கின்றன. ஆனால் அவற்றைச் சேமிக்கவோ காணவோ, ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட தளத்திற்கும் செயலிக்கும் தனித்தனியே சென்று பார்வையிட வேண்டும்.
இதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் தான் வுக்மார்க் (Vookmark). Video + Bookmark என்பதின் சுருக்கமே Vookmark. இதன் எக்ஸ்டன்சனை குரோம் மற்றும் சஃபாரி ப்ரெளசர்களில் பயன்படுத்தி, உங்களுக்குத் தேவையான வீடியோக்களை ஒரே கிளிக்கில் சேமித்து வைக்கலாம். பிறகு தேவைப்படும்போது அவற்றை உங்கள் iPhone / Android / Apple TV மூலம் கண்டுகளிக்கலாம். உங்கள் மொபைலில் உள்ள யூடியூப், டெய்லி மோஷன், வீமியோ அப்ளிகேஷன்களிலிருந்தும் நேரடியாக வீடியோக்களை Vookmark-கில் சேமித்துக் கொள்ளலாம்.
வீடியோவை எப்படி Vookmark செய்வது?
உங்கள் கணினியில் Safari / Chrome ப்ரெளசர்களில் Vookmark எக்ஸ்டன்சனை முதலில் இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.
பிறகு உங்கள் ஆண்ட்ராய்டு / ஐபோன் / ஆப்பிள் டிவியில் Vookmark அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.
அவ்வளவுதான்! இனி உங்களுக்கு வேண்டிய வீடியோக்களை ஒரே கிளிக் செய்வதன் மூலம் அவற்றை திரும்பவும் பார்ப்பதற்காக புக் மார்க் செய்ய முடியும்.
Chrome / Safari எக்ஸ்டன்சனை இன்ஸ்டால் செய்தே ஆக வேண்டுமா?
பெரும்பாலும் நாம் கணினியின் ப்ரெளசர்கள் வழியாக இணையம் பயன்படுத்துவதால், மொபைல் அப்ளிகேஷனோடு சேர்த்து, எக்ஸ்டன்சனையும் இன்ஸ்டால் செய்வது நல்லது.
அப்ளிகேஷனில் வீடியோ டவுன்லோடு ஆகுமா?
இல்லை. வீடியோவின் லிங்க் மட்டுமே சேமிக்கப்படும். முழு வீடியோவும் அல்ல. ஆதலால் மெமரி குறித்தோ நெட் பேக் லிமிட் குறித்தோ, வுக்மார்க் பயனாளர்கள் கவலைப்படத் தேவையில்லை.
ஆண்ட்ராய்டில் சேமித்ததை ஐபோனில் காண முடியுமா?