பிஎப் பங்கீட்டு அளவை 10 சதவீதமாக குறைக்க இ.பி.எப்.ஓ ஆலோசனை
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தது ஊழியர்கள் தரப்பிலும், நிறுவன தரப்பிலும் தலா 12 சதவீத பணத்தை இ.பி.எப்
(ஊழியர் சேம லாப நிதி திட்டம்), இ.பி.எஸ்(பணியாளர் ஓய்வூதியத் திட்டம்)மற்றும் EDLI (பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதித் திட்டம்) திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. இந்த அளவீட்டை ஒய்வூதிய அமைப்பான இ.பி.எப்.ஓ, 10 சதவீதமாகக் குறைக்க ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான இறுதி முடிவு நாளை(மே-27) முடிவு செய்யப்பட உள்ளது. வளர்ச்சிக்கு உறுதுணை இந்த 10 சதவீதம் என்பது ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் டிஏ கீழ் அளிக்கப்படும் பணத்தில் பிடிக்கப்படுவது. 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படுவதன் மூலம் ஊழியர்களுக்கு அதிகமான பணம் கையில் கிடைக்கும் .இது நாட்டின் வளர்ச்சி உறுதுணையாக இருக்கும் என மத்திய தொழிலாளர் அமைச்சகம் இ.பி.எப்.ஓ அமைப்பிற்குப் பரிந்துரை செய்துள்ளது. இ.பி.எப்.ஓ தான் இதற்கான இறுதி முடிவு எடுக்கும்.