12 th CBSE RESULTS-சிபிஎஸ்இ தேர்வு முடிவு (28.05.2017)வெளியீடு
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் மே 24ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கருணை மதிப்பெண் விவகாரத்தால் தேர்வு முடிவுகள் வெளியாக வில்லை. நாளை அல்லது நாளை மறு நாள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மார்ச் 12ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு நடந்தது. இந்த தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் சுமார் 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
கருணை மதிப்பெண் மே 19ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் மே 24ந் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கும் முறையை சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்தது.
நீதி மன்ற தீர்ப்பு இதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் அதை ரத்து செய்வது நியாமற்ற செயல் என உத்தரவிட்டனர்.
மதிப்பெண் வழங்க ஏற்பாடு இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக சிபிஎஸ்இ இயக்குநர் சதுர்வேதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரைச் சந்தித்து பேசினார். கருணை மதிப்பெண் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளன.
சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவு நாளை மறுநாள் தேர்வு முடிவுகள் வெளியாகும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.