இன்று பிளஸ் 2 'ரிசல்ட்' : 10 நிமிடங்களில் பார்க்கலாம்


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்கும். 


தமிழகம் முழுவதும், 8.98 மாணவ, மாணவியர் உட்பட, 9.34 லட்சம் பேர் எழுதிய, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை, 10:00 மணிக்கு வெளியாகின்றன. www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வு முடிவை பார்க்கலாம்.
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நுாலகங்களில், இலவசமாக தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மாணவரின் பதிவு எண், பிறந்த தேதியை, மாதம், ஆண்டுடன் பதிவு செய்தால், மதிப்பெண் கிடைக்கும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், வரும், 15 முதல் பதிவிறக்கம் செய்யலாம்; 17 முதல், தாங்கள் படித்த பள்ளியில், தேர்வு எழுதிய மையத்தில், தற்காலிக சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆண்டு, மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறுகிறது. விடைத்தாளை மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் நகல் பெறவும், இன்று முதல், 15 வரை விண்ணப்பிக்கலாம்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பம் பெறப்படாது. மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குஉரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வில் மதிப்பெண் குறைவா? - '104'ல் ஆலோசனை பெறுங்கள்! : பிளஸ் 2 தேர்வில், மதிப்பெண் பிரச்னை ஏற்பட்டால், மாணவர்களும், பெற்றோரும் மன அழுத்தத்தை குறைத்து தெளிவுபெற, '104' எண்ணை தொடர்பு கொள்ளலாம். பிளஸ் 2 தேர்வு முடிவு, இன்று காலை வெளியாகிறது. மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், மொபைல்போன் எண்ணில், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பப்பட உள்ளது. மதிப்பெண் குறைவான மாணவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள், மன அழுத்தத்தில் சிக்கி, விபரீத முடிவுகளை எடுப்பது தொடர்கிறது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)