வேளாண் படிப்புக்கு மவுசு; 21 ஆயிரம் பேர் விண்ணப்பம் !!
மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள ஆர்வத்தால், வேளாண் படிப்புகளுக்கு, நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கோவை, வேளாண் பல்கலையில், 12ல், வேளாண் படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோ
கம் துவங்கியது. கடந்த நான்கு நாட்களில், 12 ஆயிரத்து, 487 மாணவியர்,
9,238 மாணவர்கள், ஒரு திருநங்கை என, 21 ஆயிரத்து, 726 பேர் விண்ணப்பித்து உள்ளனர். கடந்தாண்டு, வேளாண் படிப்புக்கு, மொத்தமாக, 36 ஆயிரத்து, 322 பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த நான்கு நாட்களில், 21 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், வரும் நாட்களில், எண்ணிக்கைஅதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் பல்கலை டீன் மகிமைராஜா கூறுகையில், "மாணவர்கள், பெற்றோரிடம் ஏற்பட்டுள்ள ஆர்வமே இதற்கு காரணம்.