மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்படும்
12th Results Send to Parents Cell Phone - மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறிஉள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டமிட்டபடி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றார்.
தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் செல்போனில் மதிப்பெண்களை மாணவர்கள் அறிந்துக் கொள்ளலாம். திட்டமிட்டபடி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்களில் பிளஸ்2 தேர்வு முடிவு வெளியிடப்படும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.ல் அனுப்பப்படும் என்றார். மாணவர்களின் சான்றிதழ் தமிழ், ஆங்கிலத்தில் வழங்கப்படும். கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பாடத்திட்டங்கள் குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படுகிறது. நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் செங்கோட்டையன்.