மே-5-ல் விண்ணில் பாய்கிறது ஜி-சாட் -9 சார்க் செயற்கை கோள் !!
பிரதமர் மோடி சார்க் கூட்டமைப்பு நாடுகளுக்கு உறுதியளித்த சார்க் செயற்கை கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சார்க் கூட்டமைப்பு நாடுகளான நேபாள், பூடான், மாலத்தீவு, வங்கதேச
ம் இலங்கை , ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் பயன்பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட செயற்கை கோள் செலுத்தப்படும் என பிரதமர் கோடி கூறியிருந்தார்.
*ஆயுட்காலம் 12 ஆண்டுகள்*
இதனையடுத்து இஸ்ரோ நிறுவனம் சார்க் நாடுகளுக்கான ஜிசாட்-9 என்ற பெயரில் செயற்கைகோளை உருவாக்கி உள்ளது. வரும் 5-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண் வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ரூ.2ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளின் ஆயுட் காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொலைகாட்சி, தொலை தொடர்ந்து , டெலி மெடிசன் போன்றவற்றின் சேவைகளை பெற முடியும். மேலும் பூகம்பம், பருவகால மாறுபாடு , சுனாமி, வெள்ள சேதம் போன்ற தகவல்களை ஒரு நாடு மற்றொரு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள முடியும்