After 12th? - முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அறிவுரை
'பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எந்த படிப்பை தேர்வு செய்தாலும், படிக்கும் போதே வேலை வாய்ப்புக்கு ஏற்ற, தனித்திறன்களை வளர்க்க வேண்டும்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில், மாநிலத்தில் முதல் இடம், இரண்டாம் இடம் என்ற, ரேங்கிங் முறைக்கு, தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு, பள்ளி மாணவர்களை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
தனித்திறன்
எனவே, மாணவர்கள் வெறும் மதிப்பெண் என்ற மனப்பாட கல்வியை விட்டு, தனித்திறன் வளர்க்க வேண்டும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அண்ணா பல்கலையின் முன்னாள் துணைவேந்தரும், தமிழக பள்ளி கல்வித்துறையின் உயர்மட்ட கமிட்டி ஆலோசகருமான, பாலகுருசாமி கூறியதாவது:
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நல்ல முடிவு கிடைத்துள்ளது. அவர்கள் தேவையற்ற பயத்தை விட்டு, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணிச்சலுடன் செல்ல வேண்டிய நேரம் இது.