ஆசிரியர்களுக்கு ஐந்து நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி விடுமுறைக்கு தடை
கணித, அறிவியல் ஆசிரியர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி நடத்த, அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதால், விடுமுறையை கொண்டாட முடியாத நிலைக்கு
அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கணித மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவது குறித்து உண்டு உறைவிட பயிற்சி வருகிற 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை திண்டுக்கல், திருச்சியில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவில் தலா 50 ஆசிரியர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பள்ளி திறந்த பிறகு, மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மே மாத தொடக்கத்திலோ, கடைசியிலோ பயிற்சி வைக்காமல், இடைப்பட்ட தேதியில் வைப்பதால், இதில் பங்கேற்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய உத்தரவால் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டால் பயிற்சி நடத்தியும் பிரயோஜனம் இல்லை. பெண் ஆசிரியர்கள் ஐந்து நாட்கள் தொடர் பயிற்சியில் பங்கேற்றால், அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோரை பராமரிக்க முடியாத நிலை ஏற்படும். இது குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்குனரிடம் எங்கள் சங்கம் சார்பில் முறையிட்டுள்ளோம். அவர் பரிசீலனை செய்வதாக கூறியுள்ளார். மாவட்ட அளவில் உத்தரவை வழங்கியுள்ளனர். எனவே, மறுபடியும் இயக்குனரை சந்திக்க உள்ளோம், என்றார்.