ஆசிரியர் பணிமாறுதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தொழில்நுட்ப குளறுபடி:


ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வுக்காக நடப்பு ஆண்டில் ஆசிரியர்களிடம்விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. இந்நிலையில் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டுபல்வேறு மா
வட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒப்புகைச்சீட்டை சரிபார்த்த பல மூத்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஏனெனில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் மூத்தஆசிரியர்கள் அளித்த கணவன்/மனைவி அரசுப்பணியில் உள்ளவர் என்ற சான்றுஆன்லைனில்தொழில்நுட்ப கோளாறுகளால் உள்ளீடு செய்யப்படவில்லை. Station seniority அல்லது Spouse certificate இவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமேtick செய்யும்படி இணையதளம் தவறுதலாக  வடிவமைக்கப்பட்டதே இதற்கு காரணம்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணிபுரிந்து வரும் மூத்த  ஆசிரியர் Spouse Certificateஐ பயன்படுத்த முடியாது என்பதும், அதே நேரத்தில்பணியில்இளையவர் Spouse Certificateஐ பயன்படுத்த முடியும் என்பதும் எவ்வகையில் நியாயம்?எனவே இந்த தொழில்நுட்ப தவறை சரிசெய்து தங்களது Spouse Certificate ஆன்லைனில்உள்ளீடு செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அனைத்து ஆசிரியர்களும்கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆசிரியர் நலனில் அக்கறையுடன் தொடர்ந்து செயல்பட்டுவரும் ஆசிரியர் சங்கங்கள்இது  தொடர்பாக அரசிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவேண்டுமென ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)