சித்தா, ஆயுர்வேதா படிப்புகளுக்கு ஜூனில் விண்ணப்பம்.
சித்தா, ஆயுர்வேதா, யுனானி உள்ளிட்ட படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் தமிழகத்தில் மொத்தம் 6 அர
சு கல்லூரிகள் உள்ளன.
இதேபோல 6 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 4 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 9 தனியார் ஓமியோபதி கல்லூரிகள் 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 22 தனியார் கல்லூரிகள் உள்ளன. 5 அரசு கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இவைதவிர 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,000 இடங்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் சித்தா, ஆயுர் வேதா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி (பி.எஸ்.எம்.எஸ், பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.என்.ஒய்.எஸ், பி.எச்.எம்.எஸ்) பட்டப்படிப்பு களுக்கு 2017 - 2018-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் மாதம் தொடங்குகிறது.அடுத்த ஆண்டு முதல் இந்த பட்டப்படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று இந் திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை அதிகாரிகள் கூறினர்.