அஞ்சல்துறையின்‘மை ஸ்டாம்ப் திட்டம்


    ‘தபால் துறையின் வருமானத்தை அதிகரித்து அத்துறையை நிலை நிறுத்தவும், அதன் பாரம்பர்ய பெருமையில் மக்களை இ
ணைத்துக் கொள்ளவும் 2011 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது ‘மை ஸ்டாம்ப்’ திட்டம். மாவட்டங்களில் உள்ள தலைமை அஞ்சலக தபால்தலை சேகரிப்பு மையத்தில் தன் புகைப்படத்தை கொடுத்து ரூ. 300 செலுத்தி தன் உருவத்துடன் அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று விண்ணப்பித்தால் உடனே ரூ. 5 மதிப்பிலான 12 அஞ்சல் தலைகள் கொண்ட ஒரு சீட் அச்சடித்து தரப்படும். அதை விண்ணப்பித்தவர் ஆவணமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது தன் நண்பருக்கு அந்த ஸ்டாம்ப்பை பயன்படுத்தி தபால் அனுப்பி மகிழ்விக்கலாம்.
ஏற்கனவே அஞ்சல் அட்டைகள் அச்சடித்து வெளியிடுவதில் ஒரு அட்டைக்கு ரூ. 3 செலவாகிறது. எனவே 1 லட்சம் அட்டைக்கு ரூ.2 லட்சம் செலுத்தினால் அவர்களின் விளம்பரம் அஞ்சல் அட்டையின் ஒரு பகுதியில் இடம் பெறுகிற மாதிரி திட்டம் அஞ்சல்துறையால் அறிவிக்கப்பட்டது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)