தொடக்க கல்வி ஆசிரியர்களும் பி.எட்.,பயில மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இரண்டு ஆண்டு பி.எட்.,படிப்பிற்கானமாணவர் சேர்க்கை நடக்கிறது.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடப்பு 2017-18ம் கல்வி ஆண்டில்,தொலைநெறி மூலம் (தபால் வழியில்) மூலம் பி.எட்.,படிப்பதற்கான மாணவர்சேர்க்கை தற்போது நடந்துவருகிறது. இதில் சேர தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், என்.சி.டி.இ.,அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு ஆசிரியர் பட்டயப்படிப்பை நேர்முக வகுப்பில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 
தொடக்க கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு,புவியியல், மற்றும்கணினி அறிவியல் ஆகியவற்றில் இளங்கலை பட்டம்பெற்றவராக இருக்கவேண்டும். மேலும்பொருளாதாரம், வணிகவியல், மனைஅறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் முதுகலைப்பட்டம்பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பாடத்திட்டம் ஆங்கில வழியில் இருக்கும். 

மேலும் விபரங்களுக்கு "எம்எஸ்யுனிவ்.ஏசி.இன்' என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நிரப்பிய விண்ணப்பத்துடன், "பதிவாளர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, அபிசேகப்பட்டி, திருநெல்வேலி' என்ற முகவரிக்கு பெறப்பட்ட 650 ரூபாய்க்கான காசோலையுடன் நேரில் வந்து உடனடியாக சேர்ந்துகொள்ளலாம். 

மேலும் விபரங்களுக்கு 0462 2321620, 0462 2321614 என்ற எண்களில் விபரங்கள் கேட்கலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க கல்வி ஆசிரியர்களும் பி.எட்.,பயில மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் வாய்ப்பு

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)