தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும்
தடை நீக்கி நீதிமன்றம் உத்தரவு : தொடக்க கல்வி கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் : கல்வித்துறை அறிவிப்பு
அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கவுன்சலிங் இன்று தொடங்கி 31ம் தேதி வரை நடக்கிறது.
இந்த கவுன்சலிங்கில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பதவி உயர்வு தொடர்பாக சில ஆசிரியர் சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 6 வாரத்துக்கு தடை ஆணை பெற்றனர்.
இந்த தடையை நீக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை முறையீடு செய்தது. மேலும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கமும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உயர் நீதி மன்றம் தடை ஆணையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, 30 மற்றும் 31ம் தேதிகளில் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சலிங் திட்டமிட்டபடி நடக்கும் என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.