உங்களுக்காக கல்லூரியை தேர்வு செய்வது எப்படி?


அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பொதுத் தேர்வுக்கு முன்பாகவே முக்கிய கல்லூரிகளுக்கு விண்ண
ப்பிப்பது. பொதுவாக மருத்துவம், பொறியியல் என்று வேறுபாடு பார்க்காமல் அனைத்து நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிப்பதே பாதுகாப்பு. ஒன்று கைநழுவினாலும் இன்னொன்று கைகொடுக்கும்.

மாணவர்கள் பட்ட மேற்படிப்பை தேர்வு செய்வதில் குழப்பம் வேண் டாம். அதற்கு சிறந்த கலந்தா லோசனைகள் உதவும். கல்லூரி களின் கவர்ச்சிகரமான விளம்பரம், பிரம்மாண்ட உள்கட்டமைப்பை பார்த்து மயங்கிவிட வேண்டாம். கல்லூரியில் சிறந்த பேராசிரியர்கள் இருக்கிறார்களா? தரமான கல்வி கற்பிக்கப்படுகிறதா? வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் இல்லா மல் வெளியுலகில் நிகழும் துறை களின் வளர்ச்சியைக் கவனித்து அதற் கேற்ப மேம்படுத்தப்பட்ட கல்வியை அளிக்கிறார்களா? வேலை வாய்ப்புக்கு அளிக்கும் முக்கியத் துவம் - இவற்றை எல்லாம் தீர விசாரியுங்கள். சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் இணைய தளங்களை ஆராய்ந்து அந்தத் தகவல்களை இணையத்திலேயே குறுக்கு ஆய்வு செய்யுங்கள்.

கல்லூரிகளைத் தேர்வு செய்வதில் அவற்றின் தர வரிசைப் பட்டியலும் உங்களுக்கு உதவும். கல்லூரியின் தேர்ச்சி விகிதம், ஆய்வு வசதிகள், பயிற்சி வசதிகள், வளாக நேர்காணலுக்கு வரும் நிறுவனங்களின் தரம் மற்றும் எண்ணிக்கை, நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உண்மையிலேயே வேலை கிடைத்ததா? இவற்றை எல்லாம் ஆராய்ந்து நீங்களே தர வரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.இவ்வளவு மெனக்கெட வேண்டுமா என்பவர்களுக்கு ஆம், மெனக்கெடத்தான் வேண்டும். ஏனெனில் இதுவே உங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்!

பொறியியல் பாடம்

பொறியியல் படிக்க விரும்பு வோர், பாடப் பிரிவை தேர்வு செய் வது சவாலான விஷயம். பொறியி யலில் மட்டும் 40 பாடப் பிரிவு கள் உள்ளன. அவை அனைத் துமே சிறப்பானவைதான். ஆனாலும், நாட்டின் வளர்ச்சியை தொலைநோக் கில் கணிக்கும்போது இ.இ.இ., சிவில், கம்ப்யூட்டர் சார்ந்த பாடப் பிரிவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை மேலும் பிரகாசிக்கச் செய்யும்.இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் எரிசக்தி வளர்ச்சி அபரிதமாக உள்ளது. எரிசக்தி மூலமே தொழில் வளம் பெருகும் என்பதால் காற்றாலை, சூரிய எரிசக்தி, அணுசக்தி என 500-க்கும் மேற்பட்டத் திட்டங்களை அரசு வைத் துள்ளது. எனவே, இ.இ.இ., தேர்வு செய்யும் மாணவர்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன.சிவில் தேர்வு செய்வோர் 4 ஆண்டு பட்டப் படிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும்.

 தொழில்நுட்ப வளர்ச்சிக் காரணமாக கட்டுமானத் தொழில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவில் 15 மாடிக் கட்டிடத்தை 3 நாட்களில் கட்டி முடிக்கிறார்கள். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களை கற்றுத்தேர சிவில் பட்ட மேற்படிப்பு முக்கியம்.பிரம்மாண்டமான அடுக்கு மாடி கள், பாலங்களுக்கான அடித்தளம் அமைக்கும் தொழில்நுட்பம் தொடர்பான ஜியோ டெக்னாலஜி, கடலுக்குள் கட்டுமானம் அமைப்பது தொடர்பான ஓசோன் இன்ஜினியரிங், பூகம்பத்தை தாக்குப்பிடிக்கும் கட்டுமானம் தொடர்பான வைப்ரேஷன் அனாலிசிஸ் அண்டு எர்த்குவேக் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, நவீன கட்டுமான வடிவமைப்புகளை கற்றுத் தரும் அட்வான்ஸ் ஸ்டெக்சரல் இன்ஜினியரிங், பழைய அடுக்கு மாடி கட்டிடங்கள், பாலங்களின் அடித்தளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் இடம் பெயர்ப்பது தொடர்பான சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் அண்டு கன்ஸ்டிரக்டிங் இன்ஜினியரிங் உள்ளிட்ட மேற்படிப்புகளுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உள்ளது.

வரும் 10 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறை பெரும் வளர்ச்சி காணும். பொதுவாகவே பொறியியல் பாடப் பிரிவை தேர்வு செய்வோர் அன்றைய நிலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் அடுத்த பத் தாண்டுகளை சீர்நோக்க வேண் டும். குறிப்பிட்ட பாடப் பிரிவை தேர்வு செய்யும்போது, அத் துறைச் சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)