சென்னை பல்கலை தேர்வு தேதி அறிவிப்பு


சென்னை:சென்னை பல்கலையின் தொலை நிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், பட்டப் படிப்புகளுக்கு, ஜூன், 3 முதல், தேர்வுகள் துவங்க உள்ளன. வாரந்தோறும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தேர்வு நடக்கும். தேர்வு அட்டவணை, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.டிப்ளமா, சான்றிதழ் படிப்புக்கு, ஜூன், 13ல் தேர்வு துவங்கும். தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, மே, 27 இரவு, 8:00 மணி முதல், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

Class 6th English Learning Outcomes Chapter-1

6,7,8,9,10 Std English Notes of Lesson Collection 2022