தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரிகள்:

தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரத்தில் புதிய அரசு சட்டக்கல்லூரிகள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
         தமிழகத்தில் 6.81 கோடி ரூபாய் செலவில் தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக்
கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

     2017-18 கல்வியாண்டு முதலே இந்த சட்டக் கல்லூரிகள் செயல்படத் தொடங்கும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் உயர் தரத்துடன் கூடியசட்டக் கல்வியை அளித்திடும் வகையில், தெற்காசியாவிலேயே முதன் முதலாக சட்டக் கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா நிறுவினார்.இப்பல்கலைக்கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக, தமிழகத்தில் படிப்படியாகபோதிய எண்ணிகையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.அதன் அடிப்படையில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும்இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரத்தில் புதிதாகஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல்துவங்கப்படும்.

விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் துவக்கப்படும் இப்புதிய அரசு சட்டக் கல்லூரிகளில் 2017-18ஆம் கல்வியாண்டு முதல் 3 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம் ஆண்டில் 80 மாணவர்களுடனும், 5 ஆண்டு சட்டப் படிப்பிற்கு முதலாம்ஆண்டில் 80 மாணவர்களுடனும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.இப்புதிய அரசு சட்டக்கல்லூரிகள் நிறுவுவதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒரு தனி அலுவலர் ஒவ்வொரு கல்லூரிக்கும் நியமிக்கப்படுவார்கள்.

மேற்குறிப்பிட்ட மூன்று புதிய அரசு சட்டக் கல்லூரிக்கு தேவையான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள், நூலகப் புத்தகங்கள், அறைகலன்கள் மற்றும் இதர தேவைகளுக்கு தலா ஒரு சட்டக் கல்லூரிக்கு 2 கோடியே 27 லட்சம் ரூபாய் வீதம், 3 அரசு சட்டக் கல்லூரிக்கு, மொத்தம் 6 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவீனம் ஏற்படும்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)