ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளின் விபரம் கோரிக்கைகள் விவரம்:
பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை நவீன முறையில் மேம்படுத்துவதன் மூலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மு
டியும். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறத்தை கவர்ச்சிகரமான வண்ணத்தில் வடிவமைக்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் 16,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரு துப்புரவாளர், காவலர், கணினி ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.3,000 மட்டுமே பெற்று வரும் அரசுப் பள்ளி துப்புரவுப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். கல்வித் துறையில் ஊழலைத் தடுக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை தேவை.
பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம், தேசியக் கொடி, வினாத்தாளுக்கு வசூலிக்கும் தொகை ஆகியவற்றை அரசே ஏற்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம ஊதியம் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துவதன் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.