மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.
தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் மே 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் மே 1
5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசியவேலைவாய்ப்பு சேவை மையம் மாற்றுத் திறனாளிகளுக்கு குறுகிய கால பயிற்சி முகாமை நடத்த உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை கல்வித் தகுதி பெற்ற தகவல் தொழிநுட்பம், வெளி திறன் பெரும் நிறுவனங்கள் சார்ந்த பார்வைத் திறன், செவித் திறன் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்.கைபேசி பழுது நீக்குதல், தையல் பயிற்சி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், ஸ்க்ரீன் பிரிண்டிங் மற்றும் புத்தகக் கட்டமைப்பு ஆகியவற்றில் பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் தேசிய வேலைவாய்ப்பு சேவை மையத்தை 2017 மே 15-ம் தேதிக்குள் தொடர்பு கொள்ளவும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.மே 22, 2017 முதல் பயிற்சி தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வேலைவாய்ப்பு சேவை மையம், கிண்டி, சென்னை – 32. தொலைபேசி044 – 22501534 தொடர்பு கொள்ளவும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.