பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி.,க்கு இட ஒதுக்கீடு தொடர அரசு முடிவு.


      அரசு பணிகளில், பதவி உயர்வில், எஸ்.சி., -- எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீட்டை தொடர்ந்து செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து
ள்ளது.
அரசு பணிகளில், பதவி உயர்வில் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
          பதவி உயர்வில், இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, பல உத்தரவுகளை, பல்வேறு வழக்குகளில்சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது.இதனால், இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து வழங்குவது பற்றி, ஆலோசிக்கப்பட்டது. அப்போது, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு தொடர்ந்து வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, மத்திய பணியாளர் நல அமைச்சகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இது பற்றி ஆய்வு செய்து, பிரதமர் மோடியிடம், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சமூகத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், இன்னும் பின்தங்கியவர்களாகவே உள்ளனர். கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றிலும், மற்றவர்களை விட பின்தங்கியே உள்ளனர். அதனால், சம வாய்ப்பு கிடைக்கவும், சமூக வளர்ச்சி ஏற்படவும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு, தொடர வேண்டும்.

மேலும், பல துறைகளில், எஸ்.சி., -எஸ்.டி., பிரிவினருக்கான ஒதுக்கீடு, முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. அதை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)