பள்ளிகளில் தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் கூட்டு பிரார்த்தனை நடத்த, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து பள்ளி
களிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் முன், பிரார்த்தனை கூட்டம், மைதானத்தில் நடத்தப்படும்.
பல ஆண்டுகளாக, பின்பற்றப்பட்டு வந்த இந்த வழக்கம், ஐந்து ஆண்டுகளாக, நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும் கூட்டு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக, புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கூட்டு பிரார்த்தனையுடன், அனைத்து பள்ளிகளிலும், தினமும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும் கட்டாயமாக்கப்படுகிறது.