எத்தனை ஆப்ஸ் உங்க மொபைல்-ல இன்ஸ்டால் செய்யலாம் தெரியுமா?


ஸ்மார்ட்போன் வாங்கியதும் டெளன்லோடு செய்ய வேண்டிய ஆப்ஸ்..!



கடந்த சில ஆண்டுகளில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஒரு துறை மொபைல் ஆப்ஸ். தொட்டதுக்கெல்லாம் ஆப்ஸ் வந்துவிட்டன. நடந்து முடிந்த ஐ.பி.எல்.லுக்காக மட்டும் ஒவ்வொருவரின் மொபைலிலும் குறைந்தது இரண்டு ஆப்ஸ் புதிதாக வந்திருக்கும். சென்ற ஆண்டு வரை 2 ஜிபி ரேம் கொண்ட மொபைல்களே அதிகம் விற்றன. இந்த ஆண்டு, 3 ஜிபி அல்லது 4 ஜிபி வரை வளர்ந்திருக்கிறது. 2 ஜிபி ரேம் கொண்ட மொபைலில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்? ஹேங் ஆகாமல், பெர்ஃபார்மென்ஸ் குறையாமல் இருக்க எத்தனை ஆப்ஸ்தான் எல்லைக்கோடு?

நம் மொபைலில் எத்தனை ஆப்ஸ் இருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முக்கியமான காரணி ரேம் அல்ல. இன்டெர்னல் மெமரிதான் என்பதை மறக்க வேண்டாம். ஆப்ஸ் இயங்கும்போதுதான் ரேம் தேவைப்படும். ஃபேஸ்புக் போன்ற ஆப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்கும். அவை தவிர மற்ற ஆப்ஸ் ரேம் மெமரியைச் சாப்பிடாது. எனவே, இன்டெர்னல் மெமரிதான் எத்தனை ஆப்ஸை இன்ஸ்டால் செய்யலாம் என்பதை முடிவு செய்யும் மேல் அதிகாரி.

8ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட மொபைலில் 2ஜிபி வரை ஆப்ஸுக்காக ஒதுக்கலாம். ஆப்ரேட்டிங் சிஸ்டமே 2 ஜிபி வரை எடுத்துக் கொள்ளும். மீதமிருக்கும் 4 ஜிபியை ஃபைல்கள் ஸ்டோர் செய்ய ஒதுக்கலாம். அப்படியென்றால், 2 ஜிபியில் எத்தனை ஆப்ஸ் இன்ஸ்டால் செய்வது? தாராளமாக 40 அப்ளிகேஷன்கள் வரை இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

பொதுவாக ஆப் ஒன்றின் அளவு 10 எம்.பி.யில் இருந்து 200 எம்பி வரை இருக்கும். சில ஹெச்.டி. கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ் 1 ஜிபி கூட இருக்கும். அது தனிக்கதை. சராசரியாக, 2 ஜிபி மெமரிக்கு 40 ஆப்ஸ் இன்ஸ்டால் செய்யலாம்.

எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு உதவியுடன் கூடுதல் ஆப்களை இன்ஸ்டால் செய்பவர்களும் உண்டு. அதில் இரண்டு சிக்கல்கள் உண்டு. ஒன்று, மெமரி கார்டை மாற்றினால், அதில் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்ஸ் இயங்காது. இரண்டாவது அனைத்து ஆப்ஸும் மெமரி கார்டில் இன்ஸ்டால் செய்ய முடியாது. சில ஆப்ஸ் ஃபோன் மெமரியில் மட்டுமே இயங்கும்.

இப்போது வரும் பல ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் காட்டிய வழியிலே பயணிக்கின்றன. அதாவது, இன்டெர்னல் மெமரியை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். மெமரி கார்டு போடும் ஆப்ஷனை தர மறுக்கிறார்கள். அல்லது, இரண்டாவது சிம் போடும் ஸ்லாட்டிலே மெமரி கார்டு ஆப்ஷனை தருகிறார்கள். அதாவது, இரண்டு சிம்கள் போடலாம். அல்லது ஒரு சிம் ஒரு மெமரி கார்டு மட்டுமே போடலாம் என்கிறார்கள். கூடுதல் மெமரி கொண்ட மொபைல்களை வாங்கினால் விலை அதிகமாக வைத்து விற்கிறார்கள்.

ஆனால், எதிர்கால வளர்ச்சியை மனதில் கொண்டால், நிச்சயம் ஒரு ஸ்மார்ட்போனுக்கு 32 ஜிபி மெமரியாவது தேவைப்படும். இதுவும் அவ்வப்போது லேப்டாப்பில் இணைத்து, தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைத்துவிட்டு, மொபைலில் அழிக்கும் வாய்ப்பிருப்பவர்களுக்கே. மொபைல் மட்டும்தான் பயன்படுத்துபவர் என்றால், 64ஜிபி கூட போதாது.

8ஜிபி மெமரி, 2ஜிபி ரேம் கொண்ட மொபைல் யூஸர்ஸ் தயங்காமல் 40 ஆப்ஸ் வரை இன்ஸ்டால் செய்யுங்கள். அது போதாது என்பவர்களுக்கு மெமரி கார்டுதான் தீர்வு. அடுத்த முறை மொபைல் வாங்கும்போது, இன்டெர்னல் மெமரியை மனதில் வைத்து முடிவெடுங்கள்

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)