முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


1,663 பணியிடங்களை நிரப்பஜூலை 2-ந் தேதி தேர்வு முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் 30-ந் தேதி கடைசி நாள்

1663 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஜூலை 2-ந் தேதி தேர்வு நடக்கிறது. அத்தேர்வுக்கு இன்று (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 
வருகிற 30-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலிப்பணியிடங்கள் மற்றும்பள்ளிகள் தரம் உயரப்படுவதையொட்டி 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

எனவே, அந்த இடங்களுக்கு தகுதியான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து கொடுக்க பள்ளி கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையொட்டி ஆசிரியர்களை தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இன்று (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இதற்குரிய http://trbonlineexams.in இணைப்பினை பயன்படுத்தி இணையவழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாள் ஆகும்.

ஜூலை 2-ந் தேதி தேர்வு பாடத்திட்டத்தை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். போட்டி எழுத்துத்தேர்வு ஜூலை 2-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை நடைபெறும். 150 கொள்குறி (அப்ஜெக்டிவ் ) வினாக்கள் கேட்கப்படும். முக்கிய பாடத்தில் இருந்து 110 கேள்விகளும், கல்வி பயிற்று முறையில் இருந்து 30 கேள்விகளும், பொது அறிவில் இருந்து 10 கேள்விகளும் என்று மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு முடிவுகள், இணையதளத்தில் வெளியிடப்படும். பாடவாரியாக பணியிடங்கள் தமிழ் பாடத்திற்கு 218, ஆங்கில பாடத்திற்கு 231, கணித பாடத்திற்கு 180, இயற்பியல் பாடத்திற்கு 176, வேதியியல் பாடத்திற்கு 168, தாவரவியல் பாடத்திற்கு 87,விலங்கியல் பாடத்திற்கு 102, வரலாறு பாடத்திற்கு 146, புவியியல் பாடத்திற்கு 18, பொருளாதாரம் பாடத்திற்கு 139, வணிகவியல் பாடத்திற்கு 125, அரசியல் அறிவியல் பாடத்திற்கு 24, நுண் வேதியியல் பாடத்திற்கு 1, மைக்ரோ பயாலஜி பாடத்திற்கு 1, மனை அறிவியல் பாடத்திற்கு 7, தெலுங்கு பாடத்திற்கு 1 மற்றும் உடற்கல்வி இயக்குனர் கிரேடு-1 க்கு 39 என பாடவாரியாக பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த பணியிடங்கள் 1663 ஆகும்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank