'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்' : கூடுதல் இடங்கள் கிடைக்கும்
'நீட்' தேர்வால் தமிழக மாணவர்களுக்கு 'ஜாக்பாட்' : கூடுதல் இடங்கள் கிடைக்கும்-DINAMALAR
மத்திய அரசு நடத்தியுள்ள, 'நீட்' தேர்வால், தமிழக மாணவர்கள் அதிக அளவில் மருத்து வக் கல்லுாரிகளில் சேர வாய்ப்பு உருவாகி உ
ள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர, இந்த ஆண்டு முதல், நாடு முழுவதும், 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. தமிழக மாணவர்களுக்கு, இத்தேர்வில் விலக்கு கேட்டு, சட்டசபையில், மசோதா நிறைவேற்றப் பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தமிழகம் உட்பட, அனைத்து மாநிலங்களிலும், மே 7ல், 'நீட்' தேர்வு நடந்தது.உச்ச நீதிமன்றம், 2015ல் வழங்கிய வழிகாட்டுதல்படி, தேர்வை நடத்தி முடித்ததாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், 'நீட்' தேர்வால், தமிழக மாண வர்களுக்கு, மருத்துவக் கல்லுாரிகளில், கூடுதல் இடம்கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
இதுவரை, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை இணைப்பில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரி களில், 85 சதவீத இடங்களிலும்; தனியார் கல்லுாரிகளில், 50முதல், 60 சதவீத இடங்களிலும் மட்டுமே, தமிழக மாணவர்கள் கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கப்பட்டனர்.
அரசு கல்லுாரிகளில், மீதமுள்ள, 15 சதவீத இடங் கள், அகில இந்திய அளவில் நடந்த, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே ஒதுக்கப்பட்டன.
முந்தைய ஆண்டுகளில், தமிழக மாணவர்கள் அதிகம் பேர், 'நீட்' தேர்வை எழுதாததால், மற்ற மாநில மாணவர்களே,இந்த, 15 சதவீத இடங்களில் சேர்ந்தனர்.
அத்துடன், 'நீட்' தேர்வு எழுதிய தமிழக மாண வர்கள், நாட்டின் எந்த தனியார் மருத்துவக் கல்லுாரி மற்றும் பல்கலையிலும் சேரலாம். அதேபோல், கூடுதல் மதிப்பெண் பெற்றால், மற்ற மாநில அரசு கல்லுாரிகளில், மத்திய அரசு ஒதுக்கீட்டிலும், கூடுதல் இடங்கள் பெற முடியும்.