ரயில் பயணச் சீட்டு ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம்
உறுதி செய்யப்பட்ட ரயில் பயணச் சீட்டு வாங்கிய ஒருவர், தான் பயணிக்க முடியாத சூழலில் அதை ரத்த உறவுகளுக்கு மாற்றிக்கொள்ளலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது
ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இடம் உறுதிசெய்யப்பட்டுள்ள ஒருவர் தான் பயணம் செய்ய முடியாத சூழலில், அந்தப் பயணச்சீட்டைத் தன்
தாய், தந்தை, உடன்பிறப்புகள், மகன், மகள், கணவன், மனைவி ஆகியோரின் பெயருக்கு மாற்றிக்கொண்டு அவர்களைப் பயணம் செய்ய வைக்கலாம்.
இதற்காக ஒருவர் யார் பெயருக்குப் பயணச்சீட்டை மாற்ற வேண்டுமோ? அவருடைய அடையாள அட்டையுடன் வண்டி புறப்படும் நேரத்துக்கு 24மணி நேரத்துக்கு முன் தலைமை முன்பதிவு கண்காணிப்பாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட பணிக்குச் செல்லும் அரசு அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தில் உள்ள பிற அலுவலர்களுக்கு இவ்வாறு பயணச்சீட்டை மாற்றிக்கொள்ளலாம்.
விளையாட்டு, பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த வேறு மாணவர்களுக்குப் பயணச்சீட்டை மாற்றிக்கொள்ளலாம்.