‘நீட்’ மதிப்பெண் கணக்கீடு மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு.
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு மதிப் பெண்ணுடன் பிளஸ் 2 மதிப் பெண்ணையும் சேர்த்து கணக் கிட வேண்டும் என்ற கோரிக் கையை 3 வாரங்களில் பரிசீலித்து முடிவு எடுக்க இந்தி
ய மருத்துவ கவுன்சிலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத் தில் ராமச்சந்திரன் என்ற மருத்து வர் தாக்கல் செய்த மனு: இந்திய மருத்துவ கவுன்சிலின் 2010 அறிவிக்கையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவித்துள் ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே, தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாண வர்களும் பயன் பெறும் வகை யில், நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிட உத்தரவிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.