ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் ரேஷன் கடைக்கு வர அழைப்பு


கரூர்: ஸ்மார்ட் கார்டு வராதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று விபரங்களை சரி பார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விடுத்துள்ள செய்திக்
குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்துக்கு 1 லட்சத்து 42ஆயிரத்து 706 ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வந்துள்ளன. ஸ்மார்ட் கார்டு வரப் பெற்றவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கார்டுக்கான எஸ்எம்எஸ் வரப்பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று குடும்ப விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா?
என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும், குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் உறவினர் பெயர் விபரங்கள் பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் விடுபட்டவர்களுக்கு பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு எஸ்எம்எஸ் வரப் பெறாதவர்கள் விடுபட்ட விபரங்கள் பட்டியல் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவர்களுடைய குடும்ப அட்டை எண் இருப்பின் சரிபார்ப்பு குடும்பத் தலைவரின் பெயர் விபரம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை ரேஷன் கடையில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)