பள்ளிக் கல்வி துறையில் மாற்றங்கள்... ஆசிரியர், மாணவர், கல்வியாளரின் எதிர்பார்ப்புகள் என்ன?


தினமும் பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள்வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது. கடந்த வாரத்தில் பொதுத்தேர்வுகளில் தரவரிசை வெளியிடும் முறை
யை ரத்து செய்துள்ள தமிழக அரசு,மேல்நிலைக் கல்வியில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் தேர்ச்சி முறை மாற்றம்உள்ளிட்ட சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது.
அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். மத்திய இடை நிலைக் கல்வி வாரிய(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தைவிட, தமிழக அரசின் பாடத்திட்டம் தரமானதாகஇருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வரும் கல்வி ஆண்டிலிருந்து (2017-2018) பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வுநடத்தப்படும் என்றும் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருக்கிறது. புதியதேர்வு முறையின் படி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்துக்கான மதிப்பெண்பாடவாரியாக 200-யில் இருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருஆண்டும் ஒட்டுமொத்த மதிப்பெண் 1200-யில் இருந்து 600 ஆகக்குறைந்துள்ளது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இறுதி தேர்வுக்குப் பிறகுஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்றும்அறிவித்திருக்கிறது.இந்நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 1 முடித்துவிட்டு, பிளஸ் 2 செல்லவிருக்கும்மாணவர்களுக்கு 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுமா அல்லதுபுதிய முறைப்படி 600 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுமா என்ற கேள்விஎழுந்திருக்கிறது. இதற்கு, அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண். வசுந்தராதேவி"இந்த ஆண்டு ப்ளஸ் 1 முடித்து, ப்ளஸ் 2 செல்லும் மாணவர்களுக்குஎப்போதும் போல் 1200 மதிப்பெண்களுக்குத் தேர்வும், இந்த ஆண்டு ப்ளஸ் 1சேர்ந்து அடுத்த ஆண்டு ப்ளஸ் 2 செல்லும் மாணவர்களுக்குத்தான், 600மதிப்பெண்களுக்கு பொது தேர்வும், ஒருங்கிணைந்த சான்றிதழும்வழங்கப்படும்" என்று அறிவித்து இருக்கிறார்.

பாடத்திட்டத்தில் தமிழக வரலாறு, கலாசாரம், பண்பாடு, மற்றும் மரபு சார்ந்தபாடங்களை இணைப்பது, பள்ளியிலேயேபோட்டித்தேர்வுகளுக்கு தனிவகுப்புகள் போன்ற தமிழக அரசின் அதிரடி முடிவுகள் மாணவர்களின் எதிர்காலமுன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் என்கிறார்கள் கல்வியாளர்கள். தொடர்ந்துமூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வினை சந்திப்பது மாணவர்களுக்கு கடும் மனஅழுத்தத்தை உண்டாக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கஆரம்பித்து இருக்கிறார்கள்.அரசின் அறிவிப்பு குறித்து ஆசிரியர்களும் மாணவர்களின் மனவோட்டம் என்னஎன்பதை அறிந்துகொள்ள அவர்களிடமும் பேசினோம்.

சேலம் ஜலகண்டபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமைஆசிரியர் மரியா மெர்லின்

"தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பொதுத் தேர்வுநடத்தும்போது, மாணவர்கள் கவனம் சிதறாமல் படிப்பில் கவனம்செலுத்துவார்கள். இதனால், மாணவர்கள் விடலைப்பருவத்தில் தவறாக தடம்மாறிச்செல்லும் வாய்ப்புகள் குறையும். 11ஆம் வகுப்பு பாடங்களுக்குகொடுக்கப்படும் முக்கியத்துவம் அதிகரிக்கும். நிர்வாக ரீதியாக மூன்றுஆண்டுகள் தொடர்ந்து பொதுத் தேர்வு நடத்துவதில் ஆசிரியர்களுக்கும், பள்ளிஊழியர்களுக்கும் சில சிக்கல்கள் இருக்கக்கூடும். இருப்பினும் இந்தத் திட்டம்வரவேற்கத்தக்கது" என்கிறார்.

கன்னியாகுமரி செயின்ட் மேரிஸ் கோரெட்டி மேல்நிலைப் பள்ளியில் தற்போது10ஆம் வகுப்பு முடித்து ப்ளஸ் 1 சேர்ந்திருக்கும் மாணவி லெரின் டி.ஜிண்டா

"அரசின் புதிய அறிவிப்பால் நாங்கள் அதிகமாக மதிப்பெண் பெறவேவாய்ப்புகள் அதிகம். எங்களுக்கு ஓராண்டில் அதிகஅழுத்தம் கொடுத்துபடித்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேலும், மதிப்பெண் சான்றிதழில்ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 மதிப்பெண்கள் ஒரு சேர வரவிருப்பதால்கூடுதல்மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது" என்கிறார்.

பள்ளிக்கல்வி துறையின் மாற்றங்கள் குறித்து பொதுப் பள்ளிக்கான மாநிலமேடையின் பொதுச்செயலாளர் மற்றும் கல்வியாளர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு"பள்ளிக் கல்வி துறையின் அறிவிப்புகள் வரவேற்கிறோம். நிதிச்சுமை இல்லாதஇதுபோன்ற நடவடிக்கைகளை அரசு அறிவித்திருப்பதுமிகுந்த மகிழ்ச்சியைஅளிக்கிறது. மேலும், இந்தத் திட்டங்களை திறம்பட நிறைவேற்ற வேண்டும்என்றால், பாடவாரியாக ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உருவாக்கவேண்டும். பொத்தாம் பொதுவாகத் தேவைக்கேற்ப ஆசிரியர்களின்எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்று கூறக்கூடாது. பள்ளிவாரியாகஆசிரியர்களின் விவரங்களை அரசு வெளியிட வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்பணி காலியிடங்களாக இருக்கக்கூடாது. ஜூன் மாதம் முதல் அடுத்த ஆண்டுஏப்ரல் மாதம்வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளியில் இருக்க வேண்டும்.ஆசிரியர்களுக்குக் கற்றல்-கற்பித்தல் பணியைத் தவிர வேறெந்த பணியையும்கொடுக்கக் கூடாது. இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால்தான்இந்தத் திட்டம் வெற்றியை நோக்கிப் பயணிக்கும்" என்றவர், இன்னும் சிலவேண்டுகோள்களையும் முன் வைத்தார்.

"கடந்த 20 வருடங்களாகப் பள்ளிகளில் கற்பித்தல் முறை மற்றும் மதிப்பீடுமுறை சரியான முறையில் இல்லை. மாணவர்கள் ப்ளஸ் 1 பாடங்களுக்குமுக்கியத்துவம் கொடுக்காமல் நேரடியாக ப்ளஸ் 2 பாடங்களைப் படித்துவருகிறார்கள்.தனியார் நிறுவனங்கள் பள்ளிக் கல்வி என்பதைக் கற்றலுக்கான இடமாகப்பார்க்காமல், அதை ஒரு வியாபார சந்தையாகவே நடத்தி வருகிறார்கள். இதுபோன்ற புகார்களைஅரசின் கவனத்துக்குக் கொண்டு சென்ற போதும், அரசுஇதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.தற்போதுதான் அண்டை மாநிலங்களைப் பார்த்து தமிழகமும் ப்ளஸ் 1க்கானபொதுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதில், ஒரு மாணவர்ப்ளஸ்1 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் கூட அவர் பிளஸ் 2படிப்பினைத் தொடரலாம் என்பது கூடுதல் வசதி. பிளஸ் 2 படிக்கும் ஆண்டில்பிளஸ் 1-க்கான தேர்வுகளை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இது கல்லூரி செமஸ்டர் முறைபோன்றது. எப்படி கல்லூரியில் முதல் செமஸ்டரில் ஒருவர் தேர்ச்சிபெறவில்லை எனில், அவர் இரண்டாவது, மூன்றாவது செமஸ்டர்களில்மறுபடியும் அந்தத் தேர்வினை எழுதித் தேர்ச்சி பெறுகிறார்களோ, அந்தமுறைதான் இதிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் கட்டாயம்மாணவர்களுக்கு இது பயனளிக்கும்.மேலும், மதிப்பெண் பாடவாரியாக 200-லிருந்து 100-ஆகக்குறைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண்தான் குறைக்கப்பட்டுள்ளதே தவிர கட்டாயம்தரம் குறைவதற்கானவாய்ப்புகள் இல்லை.

இந்த 100 மதிப்பெண் என்பது,எழுத்துத் தேர்வுக்கு 70 மதிப்பெண்களும், செய்முறை தேர்வுக்கு 20மதிப்பெண்கள், அகமதிப்பீடுக்கு 10 மதிப்பெண்கள் என மூன்று பாகங்களாகபிரிக்கப்பட்டுள்ளது. இதில் அகமதிப்பீடு என்பது அசைன்மென்ட், பராக்ட்டிகல்அல்லது ஃபீல்ட் விசிட் என்று மாணவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும்விதமாக அமையும்.இணைய வழி கற்றல் மேலாண்மை தளம் என்ற, 'ஆன்லைன்' கற்றல் திட்டத்தை,பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான டிஜிட்டல் பணிகள்தற்போது துவங்கப்பட்டுள்ளன. 'இ-லேர்னிங்' இணைய தளத்தில், மாணவர்கள்,தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்குப் பயன்பாட்டுகுறியீடு எண் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். இதைப் பயன்படுத்திஅவர்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதி பயிற்சிஎடுத்துக்கொள்ளலாம். இதுவும் மாணவர்கள் திறனை அதிகரித்துக்கொள்வதற்கான ஓர் வாய்ப்பு.சில கல்வி விமர்சகர்கள் ப்ளஸ் 1 பொதுத்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.இவர்களின் எதிர்ப்பு மாணவர்களைப் பழிவாங்குவதற்காக ஒரு செயலாகும்.ஆறு பாடங்களை படித்துத் தேர்வு எழுத வேண்டிய இடத்தில், 12 பாடங்களைப்படித்து தேர்வு எழுத வேண்டும் என்று கூறுவது முறையல்ல. படிக்க வேண்டியபாடங்களின் சுமையும் கூடிவிடும் என்பதனால் இதுபோன்ற விமர்சனங்களைக்கைவிடுவதே சிறந்தது" என்றும் வேண்டுகோள் வைக்கிறார் ப்ரின்ஸ் கஜேந்திரபாபு.

கற்றதை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதையே குறிக்கோளாகவைத்திருக்கும் நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, மாணவர்களின்சிந்தனையையும், படைப்பாற்றலையும் ஊக்குவித்து பயன் பெரும் வண்ணம்தமிழக பள்ளி கல்வித்துறையில் அடுத்தடுத்த மாற்றங்கள் அரங்கேறி வருகிறது.இவற்றை அடுத்தடுத்து எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தேவெற்றி இருக்கிறது என்றே கூறலாம். மாணவர்களின் முன்னேற்றத்தைமுன்னெடுக்கும் அடுத்தடுத்த அறிவிப்புகளாகக் காத்திருக்கிறோம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)