MP3 வடிவில் இனி பாடல்கள் வராது?


எம்பி3 ஃபார்மேட் உருவாக்கியவர்கள் இவ்வகை இசை ஃபார்மேட் விரைவில் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர்.

காலப்போக்கில் வெவ்வேறு ஆடியோ ஃபார்மேட்கள் அதிக தரம் கொண்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பிரபல இசை ஃபார்மேட்டாக இருந்து வரும் எம்பி3 விரைவில் நிறுத்தப்படுவதாக அதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக  பயன்பாட்டில் இருந்து வரும் எம்பி3 குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தன.

இந்நிலையில் நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியை சேர்ந்த ஆய்வு மையம் எம்பி3-க்கு உரிமத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. எம்பி3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பாடல்களை பதிர்ந்து கொள்ள எம்பி3 பிரபமானதாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர ஃபார்மேட்கள் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கி வருகின்றன.

இன்றைய பல்வேறு சாதனங்களும் அட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) ஃபார்மேட்டை பயன்படுத்தி வரும் நிலையில், MPEG-H எனும் புதிய ஆடியோ ஃபார்மேட்டினை உருவாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஆடியோ ஃபார்மேட்கள் குறைந்த மெமரியில் சிறப்பான ஆடியோ அனுபவத்தை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றளவும் பிரபலமாக இருந்து வரும் எம்பி3 ஃபார்மேட்கள் 1980 மற்றும் 1990களில் வடிவமைக்கப்பட்டு அவை ஆடியோ ஃபார்மேட்களின் நிலையான ஒன்றாக இருந்து வருகிறது. ஆப்பிளின் ஐபாட்களில் 2001 முதல் பிரபலமாக இருந்து வரும் எம்பி3 அனைவராலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)