Postal Department Recruitment - இந்திய தபால் துறையில் 20969 வேலை.....


        இந்தியாவின் பெரிய அரசு துறை இந்திய தபால் துறை. இந்த துறை முதன் முதலாக 1854 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது
புதுதில்லி சன்சாட் மார்க் பகுதியில் தலைமையகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

இது அரசாங்கத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும்.

இவை இந்தியா முழுவதும் தபால் சேவை, பார்சல், ஈஎம்எஸ், டெலிவரி, சரக்கு பகிர்தல், மூன்றாம் தரப்பு தளவாடங்கள் மற்றும் வைப்புத்தொகை கணக்கு போன்ற சேவைகளை வழங்கு வருகின்றன. தற்போது இந்தியா முழுவதும் 22 தபால் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறையில் 4 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இந்த துறையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 2017 ஆம் ஆண்டிற்கான 20,969 கிராமின் டக் சேவாக் பணியிடங்களுக்கான அறவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கடைசி தேதி மற்றும் முழுமையாக நிரப்பப்படாத ஆன்லைன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

நிறுவனம்: இந்தியா தபால் துறை

மொத்த காலியிடங்கள்: 13482

பணி இடம்: இந்தியா முழுவதும்

தபால் வட்டம் வாரியாக காலியிடங்கள் விவரம்:
- மகாராஷ்டிரா 1789
- கர்நாடகா 1048
- அசாம் 467
- தமிழ்நாடு 128
- தில்லி 16
- குஜராத் 1912
- பஞ்சாப் 620
- உத்தரகண்ட் 579
- மேற்கு வங்கம் 4982
- வட கிழக்கு 748
- கேரளம் 1193

கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம், வாரியத்திலிருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி, கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதி பட்டியல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், தேவையேற்பட்டால்ல நேர்காணல் நடத்தப்படலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கட்டணம் செலுத்தும் முறை: ஆஃப்லைன் செலுத்த வேண்டும் - தலைமை தபால் அலுவலகங்களில் செலுத்தலாம்.

விண்ணப்பத்தின் முறை: www.indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி விவரம்:
- கேரளா தபால் வட்டம் -  10.06.2017
- வட கிழக்கு - 05.06.2017
- மேற்கு வங்காளம் -  10.06.2017
- உத்தரகாண்ட் - 18.05.2017
- குஜராத் மற்றும் பஞ்சாப் - 11.05.2017
- தமிழ்நாடு - 05.06.2017
- கர்நாடகா - 31.05.2017
- தில்லி -  31.05.2017
- மகாராஷ்டிரா - 27.05.2017
- அசாம் - 24.05.2017
- சத்தீஸ்கர் - 20.05.2017
- ஹரியானா -  24.05.2017

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank