மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்கலந்தாய்வு Result End Vacancy​ முறையில் நடத்தப்படும்

  இந்த ஆண்டு தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கலந்தாய்வு Result End Vacancy​ முறையில் நடத்தப்படும்


          
        இம்முறையில், ஒருவர் ஒரு பள்ளியை தெரிவு செய்த பின், அவர் பணிபுரிந்த பள்ளியை உடனடியாக Vacancy ஆக அறிவிக்கப்படும்.​ இம்முறையில் பலருக்கு மாறுதல் வாய்ப்பு ஏற்படும், மேலும் குளறுபடிகளுக்கும் வாய்ப்பு ஏற்படாது. முன்னர் இக்கோரிக்கை சில நடைமுறை முரண்பாடுகளால் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது புதியதாக பணியேற்றிருக்கும் அமைச்சர், முதன்மை செயலர், தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் புதுமைகளை ஏற்படுத்தி ஆசிரியர், மாணவர் நலனில் புது இரத்தத்தை பாயச்செய்து உள்ளார்கள்.   ​அவர்களின் முயற்சியால் இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வில்  RESULT END VACANCY காட்டப்பட உள்ளது​.
      
      இம்முறையில் எந்த நிமிடத்திலும் எந்த மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் ஏற்படலாம் எனவே அவரவர் வாய்ப்பு வரும் வரை கண்டிப்பாக பொறுமையாக காத்திருக்க வேண்டும், துவக்கத்தில் காலி பணியிடம் இல்லை என வெளியே செல்ல வேண்டாம்​.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)