Smart Ration Card - எந்த குறியீட்டிற்கு என்ன அர்த்தம்?


❁ தமிழகம் முழுவதும் தற்போது பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பழைய ரேஷன் கார்டுகளில் முன் பக்கத்தில் எந்த வகையைச் சேர்ந்த
கார்டு இது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும்.

❁ அதேபோன்று தற்போது புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்று இங்கு பார்ப்போம். 
எப்படி கண்டறிவது? 
❁ www.tnpds.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பயனர் நுழைவு பகுதிக்குச் சென்று, பதிவுசெய்யப்பட்ட பயனாளர் என்ற இடத்தில் உங்களது கார்டுக்கு நீங்கள் அளித்த மொபைல் எண்ணை உள்ளிட்டு கடவுச்சொல்லை அனுப்பு என்ற தெரிவை தேர்வு செய்யவும். 
கடவுச்சொல் பெறும் முறை : 
❁ நீங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணிற்கு 7 இலக்க எண் குறுந்தகவலாக வருவதை அங்கீகாரம் என்ற இடத்தில் உள்ளிட்டுப் பதிவுசெய் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு அதிகபட்ச நேரம் 300 வினாடிகள் வரை எடுக்கும். ஒரு வேலை உங்களுக்குக் கடவுச்சொல் வரவில்லை என்றால் 1967 or 18004255901 என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகலாம். 
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகையை கண்டறிவது எப்படி? 
❁ கடவுச்சொல்லை உள்ளிட்டு உள் சென்ற பிறகு ஸ்மார்ட் கார்டு செயலாக்கம் என்பதைத் தேர்வு செய்த பிறகு உங்களது ஸ்மார்ட் கார்டின் விவரங்கள் அனைத்தையும் காண முடியும். அதில் வலது பக்கத்தில் என்எப்எஸ்எ அட்டை வகை என்று குறியிடப்பட்டு இருக்கும். அங்கு உங்களது அட்டை வகை என்ன என்பதை நீங்கள் கண்டறிய முடியும். அங்கு காண்பிக்கப்படும் அட்டை வகைகளின் விளக்கம் என்னவென்று நாம் அடுத்துப் பார்ப்போம். 
குறியீட்டின் வகைகள் : 
PHHRICE : அரசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் அளிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். 
PHAA:35 கிலோ அரிசி மற்றும் அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். 
NPHH: NPHH அல்லது NPHH-L என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். 
NPHHS : சர்க்கரை மட்டும் கிடைக்கும். 
NPHHNC : எந்தப் பொருட்களும் கிடையாது. ஒரு அடையாள அட்டையாக மட்டுமே பயன்படுத்த முடியும். 
ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை எவ்வாறு பிரிக்கப்பட்டது : 
❁ ஸ்மார்ட் ரேஷன் கார்டு வகை அனைத்தும் டிஎன்பிடிஎஸ் (வுNPனுளு) அதிகாரிகள் மூலமாக நீங்கள் பெறும் சம்பளத்தை வைத்து முடிவு செய்யப்படுகின்றது. 
குறிப்பு : 
❁ இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளை தொடர்பு கொள்ளலாம். அல்லது அரசு உதவி மையம் எண்கள் 1967 or 18004255901-ஐ தொடர்பு கொள்ளலாம்.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)