TET Exam - அடுத்தது என்ன?

TET Exam - அடுத்தது என்ன?
 அடுத்தது என்ன?
_ பிரதீப் ப.ஆ.

2 மாதம் போராடி முயன்றாச்சு.  TET தேர்வும் முடிச்சாச்சு.

அடுத்து இத்தேர்வை நினைத்து விமர்சித்து நின்று விடலாமா?
இல்லை. இப்போது படித்ததை பயன்படுத்தி மேம்படுத்தி அடுத்த தேர்விற்கு தயாராதலே அறிவுடைமை.
கோடி பல செலவு செய்து மருத்துவர், பொருயியல் படிப்பதை விட சிறந்தது ஒரு பட்டம் முடித்து தொடர்ந்து ஓரிரு வருடம் படித்து போட்டி தேர்வின் வழி அரசு பணியை பெறுவது.
வெற்றி பெறுபவன் என்ன செய்கிறான் ?
போட்டி தேர்வில் வெற்றி பெற்றவர் பலர் பதில்
அவன் ஒரு தேர்வில் தோல்வியை தோல்வியால் பார்க்காமல் அடுத்த தேர்வின் அனுபவமாய் பார்க்கிறான்
வாய்ப்புகளை பார்க்காமல் வாய்ப்புகளை உருவாக்குகிறான்
நோடிபிகேடின் வரும் வரை காத்திராமல் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருக்கிறான்
அவனது இலக்கு 1 வெற்றி. இடையில் வரும் பல தோல்வியை அவன் பொருட்டாக நினைப்பதில்லை
எதிரே நிற்பது ?
TNPSC Group 2 A : டெட் தேர்வர்கள் தாங்கள் படித்த பாடத்தில் கூடுதலாய் படிப்பதன் இத்தேர்வை சிறந்த வாய்ப்பாய் மாற்றலாம்.
எதிர்வரும் பல போட்டி தேர்விற்கும் இவை தொடர் முதலீடாய் அமையும்
PGTRB & poly. PGTRB : இது தனிப்பட்ட பாட திட்டம். உங்கள் முதன்மை பாடத்தில் சிறந்த அறிவுடையவராயின் இதில் களம் காணுங்கள்.
இரண்டில் எது என முடிவெடுப்பது உங்கள் கரங்களில் ...
வரும் வாய்ப்பு வெற்றி வாய்ப்பாக மாற்றுவோம் - வாழ்த்துகளுடன் தேன்கூடு

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)