TNPSC : சுற்றுலா துறை அதிகாரி பதவிக்கு தேர்வு அறிவிப்பு


       சுற்றுலாத் துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.         இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்
.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக சுற்றுலாத் துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களை நிரப்ப, ஆக., 19ல், முதல்நிலை தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.

          இதற்கு, ஜூன், 8 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு மட்டும், 30 வயது உச்ச வரம்பு. இந்த தேர்வுக்கு, சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பாக, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பில்., - டிப்ளமோ படிப்பும், தொழில்நுட்ப தேர்வில் கணினி ஆட்டோமேஷன் படிப்பும் முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கில மொழியில் திறன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

உண்மை தன்மை சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்ப தொகை ( அனைத்து பல்கலைக்கழகங்கள்)