10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ.


பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவி
த்துள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ உயரதிகாரி ஒருவர் தில்லியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்துவது குறித்து முடிவெடுக்க இயலாது. இந்த யோசனை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்படும். அதன்பிறகே இதுதொடர்பாக இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் விடைத்தாள்கள் திருத்தப்படுவதில் தவறுகள் நேரிடுவதாக சிபிஎஸ்இக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அதுதொடர்பாக ஆய்வு செய்து அப்பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை வழங்குமாறு 2 குழுக்களை சிபிஎஸ்இ அமைத்தது. அந்தக் குழுக்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை மார்ச் மாதத்தில் வழக்கம்போல் நடத்தாமல் பிப்ரவரி மாதத்திலேயே நடத்தலாம் என்று பரிந்துரை அளித்தது.

Comments

Popular posts from this blog

10th Std English Unit 5-6-7 Slip Test Question Papers

10th Std English One Mark Question Bank